உள்ளூராட்சி தேர்தல் குறித்த திருத்தம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்பு

0
108

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத் திருத்தங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட ஆவணங்களை தொகுத்து அதற்கான திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இதன்படி, சட்டமா அதிபரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அமைச்சரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here