கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ருக்ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில், பொறுப்பான பதவியில் இருந்த அரச மருத்துவ அதிகாரியான வைத்தியர் ருக்ஷான் பெல்லன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை குறித்து உரிய முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
இது ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
