ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 08 பில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 08 பில்லியன் ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் இந்த நிதியின் ஊடாக நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
N.S