வெங்காய விலை குறையுமா?

0
150

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

39-40 இந்திய ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 20-21 இந்திய ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. ஆனால் அடுத்த இந்திய பொதுத் தேர்தல் வரை தடை நீக்கப்படாது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், இந்தியாவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்தாலும், ஆசிய மக்கள் இதனால் அவதிப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக ஆசியாவில் வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஆசிய மக்கள் அதிகளவு காய்கறிகளை கொள்வனவு செய்ய தூண்டப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் ஆசியாவில் மரக்கறிகளின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த நிதியாண்டில் இந்தியா 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், ஏற்றுமதி தடையின் வலியை ஆசிய நாடுகள் உணர ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here