நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Date:

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்கரைப்பேட்டை, பெருமாள் பேட்டை பகுதியை சார்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கோடியக்கரை அப்பால் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.

மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் சனிக்கிழமை காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...