இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்வதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச விலைமனு கோரப்பட்டுள்ளது.
அதன்படி, 30,000 மெட்ரிக் டன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரும் பணி டிசம்பர் 21ஆம் திகதி தொடங்கப்பட்டு, 2025 ஜனவரி 02ஆம் திகதி வரை விலைமனுக்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் உப்பை இறக்குமதி செய்து உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களால் சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஜனவரி 02 ஆம் திகதி விலைமனு விடப்பட்டதன் பின்னர் 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வது நடைமுறையில் கடினமானது எனவும், அதனால் இறக்குமதி நடவடிக்கைகளுக்கு குறுகிய காலமே எஞ்சியுள்ளதாகவும், இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் உப்பு, உப்பு தொடர்பான சில பொருட்களுக்கு தடைகள் இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.