தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஆவணம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பிக்கப்பட்டு, கணிசமான அளவு முன்னேற்றம் கண்ட முயற்சி பெரும் பின்னடைவை இப்போது எதிர்கோண்டுள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தக் கோருவது என்ற ஆரம்ப நிலைப்பாட்டில் இருந்து விலகி வருவதற்கு இணங்கிய தமிழர் முற்போக்கு முன்னிணியின் தலைவர் மனோ கணேசன், மீண்டும் 13 ஐக் கட்டிப் பிடிக்க முயல்கின்றமையை அடுத்தே இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேசமயம் 13ஐ மீண்டும் வலியுறுத்துவதற்கு இணங்கவே முடியாது என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டைத் தமிழரசுத் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் திரும்பவும் வலியுறுத்தி, அதனை உடும்புப்பிடியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் விவகாரம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.
மனோவின் நிலைப்பாடு
இது தொடர்பில் தனத நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்றை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி மேற்படி 21 ஆம் திகதிக் கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு:-
சுமந்திரனின் பதில்
இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியவை வருமாறு:-
இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.