குற்றவாளிகளுடன் தொடர்புடைய சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்றனர்

Date:

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புகளை பேணிவரும் சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பாசாங்கு செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸாரின் மனா உறுதியைக் குலைக்கும் வகையில் சில அரசியல்வாதிகளும் செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு சவால்களை இந்த செயற்பாட்டின் மூலம் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அனைத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான தைரியத்தை ஜனாதிபதி தமக்கு தருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் டொலர் இருப்பு வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி, இலங்கையின் அதிகாரப்பூர்வ...

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...