கொழும்பு – ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாகவும் எனினும் விபத்தில் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை
சட்டவிரோதமான முறையில் மது