சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது.
இதன்படி, பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் இருந்து இன்று அதிகாலை மூன்று வாகனப் பேரணிகள் ஊடாக புனித சின்னங்கள் மற்றும் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வாகன பேரணி எரத்ன, பலபத்கல மற்றும் பொகவந்தலாவ வீதி ஊடாக ஹட்டனை சென்றடைந்தது.
இதன்படி, புனித சின்னங்கள் மற்றும் சிலைகள் இன்று சிவனொளிபாத மலை வளாகத்தை சென்றடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் யாத்திரை காலம் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்படுகிறது.