யாழில் மூவர் கைது

0
170

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி சந்தி மற்றும் முலவை சந்திப் பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 117 கால் போத்தல்களும் 9 முழு சாராயப் போத்தல்களும் பொலிஸ் புலனாய்வாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

மண்ணுக்குள் குழி வெட்டி அதற்குள் சாராயப் போத்தல்களை வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டவரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட்டு நேற்று (25) இன்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here