யாழில் டெங்கு காய்ச்சலால் இளைஞன் மரணம்

Date:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் ,அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , மூளை சாவடைந்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று(27) காலை உயிரிழந்தார்.

அதேவேளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் , நேற்றைய தினம் (26) மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன் , குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்து இருந்ததுடன் , கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமையால் அவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...