யாழில் டெங்கு காய்ச்சலால் இளைஞன் மரணம்

Date:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் ,அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , மூளை சாவடைந்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று(27) காலை உயிரிழந்தார்.

அதேவேளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் , நேற்றைய தினம் (26) மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன் , குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்து இருந்ததுடன் , கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமையால் அவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிப்பு

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் sjb ஆட்சி

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபையில்...

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச்...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...