வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு நிதியில் பொது அமைப்புக்களுக்கு சிறீதரன் எம்.பி உதவி

0
59

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/94 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பாரதிமன்ற சனசமூக நிலையத்திற்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களும் ஜே/101 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்திற்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினருடன் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல்ப் பணிப்பாளர் திருமதி பிருந்தினி ஜெயந்தன் நிர்வாக உத்தியோகத்தர் கே.வி தனபாலா நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பிரபாகரன் துஷ்யந்தன் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here