மறுவாழ்வு முகாம் இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு!

0
55

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணிக்காக நியாய விலைக்கடைகள் அனைத்தும் விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி நியாய விலை கடைகளை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நாளுக்கு பதிலாக ஜனவரி 15 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு விடுபடாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்று சேரும் பொறுப்பு மாவட்ட ஆட்சியரையே சேரும் என்றும், தெருவாரியாக, தினசரி சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

750 அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், நேரம் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் எவரேனும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here