பொங்கல் ஜல்லிக்கட்டு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து

0
307

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் தென்னத்தோப்பில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கலைச்சுழலை காளைகளுக்கு பளக்கும் வகையில் முதல் முறையாக வாடிவாசல் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெருத்த  திமில், பெரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பிரமாக வளம் வரும் இந்த காளைகள், பிடிக்க வரும் வீரர்களை மிரளவைக்கிறது.

காளைகளை போட்டிக்கு அழைத்து செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்களும் தயாராக உள்ளதாக ஜல்லிக்கட்டு நலன்புரிச் சங்கத் தலைவரும் இலங்கை முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

காளையார்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் போட்டிகளில் சிவகங்கை வெற்றி கோடி நாட்டும் என்றும் நம்பிக்கையுடன் மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here