கேப்டன் விஜயகாந்திற்கு யாழில் அஞ்சலி

0
83

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு யாழ்ப்பாணம்- பொன்னாலை மற்றும் மூளாய் பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இவருக்கு உலகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு ஈழத் தமிழ் இரசிகர்களும் தங்களது இறுதி மரியாதையினை செலுத்தும் வகையில் யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை அமைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்றுவரையில் கேப்டன் விஜயகாந்த் தமிழ் ஈழத்தின் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தவர்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தார்.

“ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்த வல்லல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈழத் தமிழர்களின் துயரில் பங்குகொண்ட மாபெரும் தலைவருக்கு ஈழ மண்ணில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here