தேயிலை உற்பத்தி இந்த ஆண்டு முழுவதும் பாரிய வீழ்ச்சி!

0
87

உரம் மற்றும் விவசாய இரசாயனங்கள் தடைசெய்யப்பட்டதன் மூலம் 2022 இல் உற்பத்தி 250 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தி 2023இல் 300 மில்லியன் கிலோகிராம் வரை உற்பத்தி அதிகரிக்குமென என இலங்கை எதிர்பார்க்கிறது.

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை தேயிலை சபை (SLTB) சுமார் 250 மில்லியன் கிலோகிராம் தேயிலை உறபத்தியை எதிர்பார்க்கிறது.

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்கள் வரையான தேயிலை தொழிற்துறையின் செயற்திறனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தேயிலை சபை அறிக்கையொன்றின் ஊடாக இந்த முன்னறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

SLTB தனது அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு மிகவும் நம்பிக்கையுடன் தொடங்கியது. மாதாந்திர ஏல சராசரி விலைகள் தொடர்ந்து அதிகரித்து ஏப்ரலில் இருந்து மேலும் கூர்மையாக அதிகரித்தன.

இருப்பினும், உர நெருக்கடியால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை தேயிலை தொழில்துறை பல சவால்களை எதிர்கொண்டது.

2021 இல் இலங்கை அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்ததை அடுத்து, தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் பெருந்தோட்டங்களில், கரிம உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% சரிவு 2022 நவம்பர் இறுதி வரை பதிவாகியுள்ளது.

உரத்தில் மிகவும் தாராளமான கொள்கையை அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால், 2023 இல் நாட்டின் தேயிலை உற்பத்தி குறைந்தது 290 – 300 மில்லியன் கிலோவாக மேம்படும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

நவம்பர் இறுதி வரையிலான ஆண்டுக்கான தேயிலை உற்பத்தி 231.87 மில்லியன் கிலோவாகும். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 278.96 மில்லியன் கிலோவுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைவு. இது 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 250.19 மில்லியன் கிலோவை விடவும் குறைவாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான மொத்த உற்பத்தியில், சிறுதோட்டங்களில் 174.71 மில்லியன் கிலோவாகவும் (75%) பெருந்தோட்டத்துறை 75.8 மில்லியன் கிலோவாகவும் (33%) இருந்தது. பெருந்தோட்டத்துறையில் இருந்து பதிவு செய்யப்பட்ட 20% என்ற மிகப் பெரிய சரிவுடன் இரண்டு துறைகளும் குறைந்த வெளியீடுகளைப் பதிவு செய்தன. சிறுதோட்டத்துறையில் உற்பத்தி பற்றாக்குறை 16% ஆக இருந்தது.

மதிப்பாய்விற்கு உட்பட்ட காலப்பகுதியில், மொத்தம் 5.57 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது, இது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவுகளில் 2.4% ஆகும்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here