மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று ஊவா மாகாணத்தை மையப்படுத்தி மக்கள் கருத்து பெறப்படுகிறது.
ஜனவரி 3ஆம் திகதி முதல் ஏனைய மாகாணங்களை உள்ளடக்கி மக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படவுள்ளன.
இறுதி முடிவு வரும் 17ம் திகதி அறிவிக்கப்படும் என ஆணையம் உறுதி செய்தது.