சர்வதேச நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்

0
308

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.  

வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது.

இதையடுத்து யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே  தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here