எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

Date:

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . 
சூழகம் அமைப்பினரும் , படைப்பாளிகள் உலகம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய  இந்நிகழ்வில்  வில்வரத்தினம் எழுதிய வாசிகம் நூல் வெளியிடப்பட்டதோடு   அவரது பாடல்கள் உள்ளடங்கிய ஊருக்கு திரும்புதல் இறுவட்டும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது . 
இந்நிகழ்வில்  யாழ் குடாநாட்டில் பல்வேறு துறைகளிலும்  சேவையாற்றி வருகின்ற   பொ.ஐங்கரநேசன் ( சூழலியல் )  , மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( விளையாட்டுத்துறை ) , யோ . யதுநந்தனன் ( மருத்துவம் ), .கணபதி சர்வானந்தா ( ஊடகம் ) , திரு .அ .நிரோசன் ( சட்டத்துறை ) , சிவா ( மூத்த கிராமசேவையாளர் )  ஆகியோர்   இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...