அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்!

Date:

அரசுடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும். மொத்தக் கைதிகளின் விடுதலையை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்திற்குள் சாத்தியமாக்க வேண்டும் – என ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ் அரசியல் கைதிகள் குற்றமிழைத்தவர்களாகக் காணப்பட்டாலும், அவர்களுக்கு மன்னிப்பளித்து, சமூகத்துடன் இணைந்து வாழ வழி காட்ட வேண்டும. இதை விடுத்து தமிழ்த் தரப்பும் இதை வைத்து அரசியலை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இன நல்லிணக்கம் எனும் புதிய விடயத்தைக் கூறினாலும் 31 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்படும் தருணமே இந்த நல்லிணக்க நிலை சாத்தியமாகும்.

சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பிரதிநிதியினர் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை வலியுறுத்தி நல்லிணக்கத்தின் முதற்படியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞையாக அமையும்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன் மற்றும் சித்தார்த்தன் போன்றோரைச் சந்தித்த வேளையிலும் கூட அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அதிக கரிசனை காட்டுமாறு வலியுறுத்தினோம்.

தற்போது 19 பேரின் வழக்குகளே நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏனையவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலே விடுவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகள் துரித கதியில் இடம்பெற்றிருந்தால் அனைத்து கைதிகளும் விடுதலையாகியிருப்பதற்கான சாதக நிலை காணப்படும்.

பொதுவாக ஒரு நாட்டில் போர் நடைபெற்ற பின் அதில் பங்கெடுத்த அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நிலைமை.

நல்லிணக்கத்துக்கான பேச்சுக்கள் ஆரம்பமாக முன்னர் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதிகம் வலியுறுத்தவுள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் தலைவரைச் சந்தித்த வேளை அவர் கூறினார்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...