தெற்கில் இருந்து ஏற்றி வரப்படெம் யானைகள் வடக்கில் ஊர் மனைகளை அண்டிய பகுதிகளில் இறக்கி விடப்படுவதாக மாங்குளம், நெடுங்கேணி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அநுராதபுரம், பொலநறுவை, ஆனைமடுவ காட்டை அண்டிய பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் யானைகளையும் தனியாரால் வளர்க்கப்பட்டு வயது முதிர்ந்த யானைகள் மற்றும் மதம் கொண்ட யானைகளை இவ்வாறு ஏற்றிவந்து முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் பிரதான வீதிகளில் இறக்கிச் செல்கின்றனர் என நாம் நீண்டகாலமாக குற்றம் சாட்டுகின்றோம் இருப்பினும் அதிகாரிகள் அதனை மறுத்தே வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையும் ஓர் பார ஊர்தியில் ஓர் யானை ஏற்றிவரப்பட்டபோது அதில் இருந்த நால்வரிடம் வினாவியபோது இதனை மாங்குளத்தில் இறக்கி விடுமாறு கூறியே அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக கூறுகின்றனர்.
இதற்கு பின்பும் மாவட்ட அதிகாரிகளும், அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்மை ஏமாற்ற முடியாது.்தெற்கில் இருந்து பல ஆண்டுகளாக அதிக யானைகளை வடக்கில் கொண்டு வந்து இறக்கும் அதிகாரிகள் வடக்கில் இருந்து ஒரு யானையேனும் வெளி மாவட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனரா என்பதனை கேட்க விரும்புகின்றோம்.
யுத்தத்தின்போது ஆயுதம் மூலம் அழித்தவர்கள் தற்போதும் எந்த வகையில் எல்லாம் எம்மை அழிக்க முடியுமோ அதனை மிகம் திட்டமிட்ட வகையில் மேற்கொள்கின்றனர். ஆனாலும் பதவி ஆசைகொண்னோர் அதனையும. நியாயப்படுத்தி இந்த அரசோடு ஒட்டி நிற்கின்றனர் என்றார்.