அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அதிரடி திட்டத்தால் 17 மாவட்ட மக்கள் இனி கொழும்பு வரத் தேவையில்லை!

Date:

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை நாளை (04) முதல் கொழும்பு தவிர்ந்த ஏனைய மூன்று நகரங்களில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் பணிப்புரையின் பிரகாரம், ஒருவாரம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் பணிகளை முடித்துக் கொடுப்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இதன்படி, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான ஒருநாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக இதுவரை கொழும்பு வந்துள்ள பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாளை முதல் பின்வரும் அலுவலகங்களில் அதே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

மாத்தறை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்ட மக்களுக்கு – மாத்தறை அலுவலகம்

கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்ட மக்களுக்கு – கண்டி அலுவலகம்

வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்ட மக்களுக்கு – வவுனியா அலுவலகம்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...