ராஜினாமா கடிதம் ஏன் தாமதமானது? காரணம் தெரிய வந்தது

0
624

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து முதலில் டுபாய் மாநிலத்திற்குச் செல்ல முயற்சித்தார்.

ஆனால் துபாய் மாநிலத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழும் அபாயம் உள்ளதால் அவரது கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

அதன் பின்னர், அவர் சிங்கப்பூர் செல்ல முயற்சித்ததாகவும், அதற்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த கணிசமான கால அவகாசம் கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தால் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் நுழைய மறுத்தால், குடிவரவுச் சட்டங்களின்படி, அந்த நபர் தனது குடியுரிமை உள்ள நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் போது அவருக்கு அப்படி ஏதாவது நடந்தால், அவர் ஒரு சாதாரண குடிமகனாக மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும். ஆனால் அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர் திருப்பி அனுப்பப்பட்டாலும், அவர் மீண்டும் இலங்கைக்கு ஜனாதிபதியாக வரலாம்.

இந்த சட்ட மற்றும் தொழில்நுட்ப உண்மைகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதமானது.

அதன்படி அவர் சிங்கப்பூருக்குள் நுழைந்து அங்கு குடியேறிய பின்னர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here