ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதற்காக கட்சியின் கருத்துக்கு புறம்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜி.எல். பீரிஸ் ,டலஸ் அழகப்பெரும கட்சியில் அங்கம் வகிப்பதால் அவருக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானிக்க வேண்டும் என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரை முன்வைக்காமல், சம்பந்தப்பட்ட தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.