ரணிலை விரட்ட முழு நாடும் போராட்ட களமாக மாற வேண்டும்

0
208

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜூலை 18, 19 ஆகிய இரு தினங்களில் அருகில் உள்ள நகரங்களில் போராட்டங்களை நடத்த வருமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அவர், முழு நாட்டையும் போராட்ட பூமியாக மாற்றி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்துடன் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here