டலஸ் அழகப்பெரும இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் .டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி மற்றும் ஊழலற்ற ஒருவரையே நாட்டை வழி நடத்துவதற்கு நாடு கோருவதாகத் தெரிவித்த அவர .டலஸ் அழகப்பெரும அத்தகைய பண்புகளைக் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அடுத்த ஒன்றரை வருடங்களில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கான திட்டங்களை அழபெரும வெளிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.