ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இன்னும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
“இப்போது சிலருக்கு ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை உள்ளது. அதை நாம் அனுமதிக்க வேண்டும். இலங்கையில் போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலிருந்து வந்த அரசியலின் கடைசி இணைப்பு ரணில் விக்கிரமசிங்க என்று கூறப்படுகிறது. அவரால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இருப்பினும், அவருடைய கொள்கையை நடைமுறைப்படுத்த இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.”
நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதுரலியே ரதன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்