Sunday, January 12, 2025

Latest Posts

மீண்டும் 5 கொரோனா மரணங்கள் பதிவு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீள அதிகரித்து வருவதன் காரணமாக, சுகாதார பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும் என COVID – 19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி வலியுறுத்தியுள்ளார்.

முகக்கவசம் அணிந்துகொள்வதுடன், கைகளை அடிக்கடி கழுவுவதுடன், சமூக இடைவௌியை பேணுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்றைய(26) தினத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஐவர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மீண்டும் கொரோனா  நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது தொடர்பான புதிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.

அதனடிப்படையில், உட்புற இடங்களில், பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடும் போதும் முக்ககவசம் அணிவது கட்டாயமாகும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.