300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொக்லெட், கொக்கோ அடங்கிய உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உட்பட சுமார் 300 பொருட்கள் அதில் அடங்கிக் கொள்கின்றன.
பால், சாக்லேட், வாசனை திரவியங்கள், டியோடரண்டுகள், முக திசு, மேசை உடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள்
,எலக்ட்ரானிக் கால்குலேட்டர்கள், டிஜிட்டல் எலக்ட்ரானிக் கல்வி உபகரணங்கள், ஷேவர்ஸ், ஹேர் கிளிப்பர்கள், ஹேர் ட்ரையர்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் அயர்ன்கள், விளையாடும் அட்டைகள், விசைப்பலகை கருவிகள், எலக்ட்ரிக்கல் அலாரம் கடிகாரங்கள், பைனாகுலர்கள், சன்கிளாஸ்கள்,