தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள ஷானி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஷானி அபேசேகரவுக்கு நீதி வழங்குவதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலையீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஓய்வூதியம் கூட பறிக்கப்பட்டது.
இதேவேளை, ஷானி அபேசேகர மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணிக்கு வருவார் என பல தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.