விடுதலையாகி வெளியே வந்தார் ரஞ்சன்

0
105

ஜனாதிபதி வழங்கிய நிபந்தனையுடனான பொதுமன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது சிறைச்சாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வௌியிடவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை சஜித் அணியினர் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here