உணவுக்கே வழியில்லாத போதும் 600 லட்சம் பெறுமதி பென்ஸ் கார் கனவை நிறைவேற்றிக் கொண்ட பிரபலம்!

0
168

நாடு பெரும் டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, கடன் தவணையை செலுத்த முடியாமல், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் சில அரசியல்வாதிகள் மற்றும் சில உயர் அரசாங்க அதிகாரிகளுக்கு,வசந்த காலம் வந்துவிட்டது.

ஒரு எரிபொருள் கப்பலுக்குத் தேவையான டொலர்களைக் தேடுவதை விட அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் கார் கனவுகளை நிறைவேற்ற டொலர்களைக் தேடுவது அவ்வளவு கடினம் அல்ல.

அண்மையில் நியமிக்கப்பட்ட இவ்வாறான உயர் அதிகாரியின் கார் கனவுக்காக அண்மையில் 600 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

600 இலட்சம் ரொக்கமாக செலுத்தி புத்தம் புதிய பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருபுறம், நாடு திவாலாகி, மக்கள் திவாலாகும் நிலையில், மக்களின் துன்பத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து தியாகங்களையும் செய்து, பதவிகளை ஏற்றவர்கள் சிறிய தொகையை செலவு செய்வதில் தவறில்லை.

ஆனால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் சொகுசு அனுபவிக்கவும் இவ்வாறு வாகனங்களை வாங்குவது பற்றிய அனைத்து தகவல்களையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்த LNW பின்நிற்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here