இலங்கையின் அண்மைக்கால இறக்குமதி கட்டுப்பாடுகள் வெளி நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நீக்கப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கைகளே என்று CBSL ஆளுநர் வலியுறுத்தினார்.
நாட்டின் வரையறுக்கப்பட்ட வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், நிலைமை மேம்படுவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்றார்.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கலாநிதி வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய இறக்குமதி தடைகள், குறிப்பாக இயந்திர உதிரிபாகங்கள் மற்றும் சிறு வணிகங்களை பாதிக்கும் சில தொழில்துறை பொருட்கள் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.