கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடு தழுவிய அமைதியின்மையின் போது தீயினால் அழிக்கப்பட்ட சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் தன்னுடையது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து நியூஸ் ஃபர்ஸ்ட் நடத்திய விசாரணையில், இது தாம் உட்பட பலருக்கு சொந்தமான கூட்டுச் சொத்து.
குறித்த உல்லாச விடுதியானது சட்டரீதியாக நிர்மாணிக்கப்பட்ட உல்லாச விடுதி எனவும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் எந்தவொரு தரப்பினருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ரோஹித ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உல்லாச விடுதியின் உரிமை குறித்து விசாரணை நடத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த ஹோட்டல் தொடர்பில் சில தரப்பினர் அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக ரோஹித ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கின்றார். அந்தத் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராகத் தயார்படுத்துமாறும் மேலும் தெரிவித்துள்ளார்.