தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடனை செலுத்தாதவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% லிருந்து 18% ஆகவும், குத்தகைக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 12% லிருந்து 34% ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலைமையால் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட கடன் தவணை மற்றும் குத்தகை தவணைகளை செலுத்த முடியாமல் பலர் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.