நாட்டில் தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதால் அதற்குள் தட்டுப்பாடு நீங்கும் என சங்கத்தின் தலைவர் திரு.நிஹால் சேனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமில்லை எனவும், ஆனால் தற்போது கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சந்தையில் பல்வேறு அதிக விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.