ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இதனூடாக இலங்கை வலைப்பந்து அணி 6ஆவது முறையாக ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 63:53 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.