சுயாதீனமான 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு பாராளுமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியை நியமிக்கும் நடவடிக்கையில் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததாலா அல்லது பதின்மூன்று பேரைக் கண்டு அரசாங்கம் பயப்படுவதால்தானா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
சர்வதேச ரீதியாகக் கூட பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ள வேளையில்,
பாராளுமன்றத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்குக் கூட பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எதிர்பார்பது என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.