“மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வேறொரு தனியான கால அட்டவனையின் கீழான தனியான விவசாய வலயம் வேண்டு்ம் என்றே இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனூடாக இவர்களது உரப் பிரச்சினை தீரும், நெல்லுக்கான விலையில் ஸ்த்தீரத்தன்மை ஏற்படும், கடன் நிவாரணங்களை பெறும்போதும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அவர்கள் முகம் கொடுக்கும் அடுத்த பிரச்சினை தான் மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபை இல்லை. கமநல சேவை மத்திய நிலையங்களின் எண்ணிக்கையும் இங்கு மிகவும் குறைவானதாக இருக்கிறது. இருக்கும் கமநல மத்திய நிலையங்களிலும் போதுமானளவு அதிகாரிகளும் இல்லை.
அதே போல் காட்டு யானை – மனித மோதலை தடுப்பதற்கான தீர்வுகளும் அவசியமாகும்.”
இவ்வாறு சஜித் பிரேமதாஸஎதிர்க்கட்சித் தலைவர் கடந்த (23/09/2022) ஆந் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.