22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை அடுத்த அமர்வில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இன்றும் (06) நாளையும் (07) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு கடந்த 29 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.