சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
18 பேர் கொண்ட தூதுக்குழுவினருடன் விசேட விமானத்தில் நேற்று இரவு 08.20 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
சீன-இலங்கை இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு நிறைவை ஒட்டியே சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெற்றுள்ளது.