ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான அலவ்வ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நேற்று (11) இடம்பெற்ற நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 18 வாக்குகளும், ஆதரவாக 9 வாக்குகளும் கிடைத்துள்ளன.
அலவ்வ பிரதேச சபை 28 உறுப்பினர்களைக் கொண்டது, அதில் 15 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
எனினும் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்கள் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததோடு அவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் இணைந்து வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 9 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் சபையில் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.