திலினி விரைவில் விசேட உரை ஒன்றை ஆற்றி உண்மைகளை வெளியிடுவார்

0
151

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழுமத்தின் தலைவர் திலினியின் ஊடக நிபுணர்களாக பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களான சுரங்கி கொடித்துவக்கு மற்றும் தனஞ்சய செனவிரத்ன ஆகியோர் இன்று (13) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், திகோ குழுமத்தின் வர்த்தகம் தற்போதும் இயங்கி வருவதாகவும், தாங்கள் வழமை போன்று செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, திலினி பிரியமாலி எதிர்காலத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுரங்கி கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் சுரங்கி கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here