இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சீனாவுடன் கூட்டு வைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
எனவே, ஆயுதப் படைத்தளமாக இலங்கையைப் பயன்படுத்த நினைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா முறியடிக்காவிடில் மிகப்பெரிய இழைப்பை சந்திக்க வேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார்.