பல அமைச்சுக்களின் வரம்பை திருத்தியமைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு!

0
141

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை மீளாய்வு செய்து அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனப் பதிவுத் துறையும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேலும், விவசாய அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையம் ஆகியனவும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நீக்கப்பட்ட நிறுவனப் பதிவுத் திணைக்களம் மற்றும் சிலோன் போஸ்பேட் நிறுவனமும் புதிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் ரோபோட்டிக்களுக்கான சிறந்த மையம் என்பன வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here