பாடசாலை மாணவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்

Date:

மாத்தறை திஹாகொட பிரதேசத்தில் நேற்று (28) பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மித்தவெல – கந்தேபொல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிடச் சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கி வெடித்ததுடன், குறித்த மாணவன் மீது துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 14 வயதுடைய மாணவன் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் திரண்டதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...