இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரொட்டி உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்படும்.