நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நவம்பரில் விசாரணை

0
24

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, மஹிந்த பத்திரண, அசங்க நவரத்ன மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்தனர் எனக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செய்த பரிந்துரை தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் அழைக்கப்பட்டன.

அதற்கமைய, பெயரிடப்பட்டுள்ள தரப்பினருக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான சமர்ப்பணங்களை சமர்பிப்பதற்காக இவ்வழக்கை எதிர்வரும் நவம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் மீண்டும் அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here